அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அல்குர்ஆன் 

     

       உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும்          சுவர்க்கத்திற்கும்விரைந்துசெல்லுங்கள்.
       அதன் விசாலம்,வானங்கள் பூமியின்                         விசாலத்தைப் போன்று.(அது)
           இறையச்சம் உடையவர்களாக(வே)
                தயார் படுத்தப்பட்டுள்ளது.

                                         அல்குர்ஆன்:3:133




நபியே! சூரியன் சாய்ந்ததிலிருந்த இரவின்    இருள் சூழம் வரையில்  (ளுஹர்,அஸர் மஃரிப் இஷா ஆகிய நேரத்தொழுகைகளைத்  தொழுதுவாருங்கள்)ஃபஜ்ர்தொழுகையையும் தொழுது வாருங்கள். ஏனென்றால் ஃபஜ்ர்             தொழுகையானது மலக்குகள் கலந்து               கொள்ளும் தொழுகையாகும்.

                                            அல்குர்ஆன்:17:78




வல்லதீன ஹும் அலா ஸலாதிஹிம் யுஹாஃபிலூன்
தங்கள் தொழுகைகளையும் (காலா காலத்தில் தவறாது) கடைப்பிடித்து வருவார்கள். 

                                           அல்குர்ஆன்:23:9




(உங்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள்)

                                           அல்குர்ஆன்:29:57




இன்னஸ் ஹலாத்த தன்ஹா அனில்ஃபஹ்சாஇ வல் முன்கரி.

நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும்,  பாவங்களிலிருந்து (மனிதனை)விலக்குகிறது.

                                          அல்குர்ஆன்:29:45




வமா அர்சல்னாக்கா இல்லா ரஹ்மத்தில்லில் ஆலமீன்

(நபியே)உங்களை உலகத்தாருக்கு ஒரு அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை.

                                           அல்குர்ஆன்:21:107




இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்பவர்கள் மீதும் வெதனையை
 இறக்கி வைப்போம்.

                                                அல்குர்ஆன்:15:91




பெண்கள், ஆண்பிள்ளைகள்,தங்கம், வெள்ளி, பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள், (ஆடு,மாடு, ஒட்டகம்) ஆகிய கால்நடைகள்,பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது                            மனிதர்களுக்கு அழகாக்கபட்டுள்ளது. எனினும்,இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே. அல்லாஹ்விடத்திலோ (நிலையான)அழகிய தங்குமிடமுண்டு.

                                               அல்குர்ஆன் 3:14




(நபியே) வஹிமூலம் நாம் உங்களுக்கு அறிவிக்கும் இந்த குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உங்களுக்கு நாம் விவரிக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீங்கள் இதனை அறியாதவராகவே இருந்தீர்கள்.

                                                 அல்குர்ஆன் 12:03




நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

                                                 அல்குர்ஆன் 2:153

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ