அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ




அல்குர்ஆன் (ஹதீஸ்)
Hadiths of the day
(7.9.2022)


அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் பெரும் கிருபையுடைய வனாகவும்இருக்கிறான்.
                                             
அல்குர்ஆன் 16:18




அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். அவன் வானத்தை படைக்கக் கருதி அதனை ஏழாகவும் அமைத்தான். அன்றி( அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.

            அல்குர்ஆன் 2:29


(புசிக்கக்கூடாது என்று விலக்கப்பட்டிருப்பவை எல்லாம்) செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப்பட்டவையுமாகும். எவரேனும் பாவம் செய்யும் எண்ணமின்றி பசியாலும், நிர்ப்பந்தத்தாலும் இவைகளைப் புசித்தால் அவர் மீது குற்றமாகாது. அல்லாஹ் மிக மன்னிப்பாளன்,கிருபையாளன்.

         அல்குர்ஆன் 16:115
                                               
  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ