بِسۡمِ اللّٰهِ الرَّ حۡمٰنِ الرَّ حِيۡمِ

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

குா்பானி என்றால் என்ன?


குா்பானி என்ற உருது வார்த்தை குா்பானி என்ற அரபி வார்த்தையிலிருந்து பிறந்ததாகும். அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக பயன்படுத்தப்படும் பொருளுக்கு குா்பானி என்று சொல்லப்படும். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் செய்யும் அனைத்து நல்ல அமல்களுக்கும் குா்பானி என்று சொல்லலாம் எனினும் பொது வழக்கத்தில் அல்லாஹ்விற்காக கால்நடைகளை அறுப்பதற்கே இப்பெயர் கூறப்படுகிறது. முன்சென்ற சமுதாயத்தினர் மீது குா்பானி கடமையாக்கப்பட்டிருந்தது.

(அல்குா் ஆன் 22:34)



குா்பானியின் சிறப்புக்கள்


 "குா்பானி கொடுக்கும் நாளன்று குா்பானி செய்வதைவிட அல்லாஹ்விற்குப் பிரியமான அமல் வேறு ஏதுமில்லை. அறுக்கப்பட்ட அந்தப் பிராணி மறுமை நாளில் தனது கொம்புகள், முடிகள் , கால் குளம்புகளுடன் உயிர்பெறும் வரும். குர்பானி பிராணியை அறுக்கும் போது அதன் இரத்தம் பூமியில் விழுவதற்குள்ட அல்லாஹ்விடம் அது ஒப்புக்கொள்ளப்பட்டதாகி விடுகிறது. எனவே முழு மனதூய்மையுடன் குா்பானி கொடுங்கள்"என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


குா்பானி கொடுக்க முடியாவிட்டால்

 ஏதேனுமொரு காரணத்தால் குா்பானி கொடுக்க முடியாமல் ஆகி குா்பானியின் நாட்கள் முடிந்து விட்டால் குா்பானி பிராணியை  வாங்கவில்லையெனில் அதன் தொகையை சதகா செய்துவிடவேண்டும் .கடந்த வருடங்களில் குா்பானி கடமையாக இருந்தும் சட்டம் தெரியாததால் கொடுக்கவில்லையென்றால் கடமையான ஒவ்வொரு வருடத்திற்கும் நடுத்தரமான ஒரு ஆட்டின் விலையைக் கணக்கிட்டு சதகா செய்துவிட வேண்டும். மாறாக சென்ற வருடங்களிலன் குா்பானியை இந்த வருடத்தில் சோ்த்து நிறைவேற்றி முடியாது.  குர்பானியில் களா இல்லை.



குா்பானி் நாட்கள்


 துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் காலையிலிருந்து பிறை 12 ஆம் நாள் சூாியன் மறையும் நேரத்திற்கு முன்புவரை குா்பானியின் நாட்களாகும். இம் மூன்று நாட்களில் முதலாவது நாளே சிறந்த நாளாகும். இந்நாளில் தரப்படும் குா்பானிக்கு  நம்மை அதிகமாகக் கிடைக்கும் ஷாஃபியி மத்ஹபில் பிறை 13 ஆம் நாள் வரை குா்பானி கொடுக்கலாம் .மேற்கொண்ட குா்பானியின் நாட்களில் பகலைப்போன்றே இரவு நேரத்தில் குா்பானி கொடுக்கலாம். ஆனால் அது சிறப்பல்ல.


குா்பானியின் நேரம்

 ஈது தொழுகை நடைபெறும் ஊராக இருந்தால் ஈது தொழுகை முடிந்த பிறகு தான் அறுக்க வேண்டும் .

ஒரு பெரிய ஊரில் பல பள்ளிகள் இருந்து ஏதேனுமொரு பள்ளியில் ஈது முடிந்து விட்டால் அவ்வூாிலுள்ள அனைவரும் குா்பானி செய்யலாம்.குா்பானி செய்பவர் இன்னும் ஈது தொழவில்லை என்றாலும் சரி குா்பானி கொடுக்கப்பட்ட பிராணி எந்த இடத்தில் உள்ளதோ அந்த இடத்தின் சட்டத்தையோ கவனிக்கவேண்டும். குா்பானி கொடுப்பவர் இருக்கும் இடத்தை கவனிக்கக்கூடாது.

கூட்டு் குா்பானியின் சட்டங்கள


 1.மாடு, ஒட்டகம் இவற்றில் ஏழு பேர் சேர்ந்து குா்பானி கொடுக்கலாம். ஆனால் ஆடாக இருந்தால் ஒருவவருக்கு ஒரு ஆட்டை முழுமையான குா்பானி செய்வது கடமையாகும். 2.ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும மேற்பட்ட குா்பானி கடுமையான நபர்கள் அனைவருக்கும் சேர்ந்து ஒா் ஆட்டை அறுத்தால் யாருடைம் நிறைவேறாது. 3.மாடு ஒட்டகத்தில் குா்பானி ஆகீகா,சதகா,நேர்ச்சை,நஃபில் ஆகிய  வைத்து கூட்டுசேரக்கூடாது அவ்வாறு சேர்ந்தால் யாருடைய குா்பானியும் கூடாது. 4.அறுக்கப்பட்ட பின் அதன் இறைச்சி கூடுதல், குறைவு இல்லாமல் ஏழு சமபங்கு களாகப்பிாிக்கப்பட் உாிய வர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேண்டும் ஆனால் அதன் கால்களோ, தோலோ அவர்களுக்கு தேவைப்பட்டால் அப்போது சமமாக பங்கு வைக்கத்தேவையில்லை.

5.ஏழு பேரை விடக்குறைவான நபர்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் கூட்டு சேர்ந்தது அறுப்பதும் கூடும் .அப்போது இறைச்சியை ஏழாகப்பிாிக்காமல்  அவர்களின் எண்ணிக்கையளவு சம பங்காக பிாித்துக் கொள்ளலாம்.

6.ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பங்குகளுக்குாிய பணம் செலுத்தி அதனளவு பங்குகளை பெற்றுக்கொள்ளலாம்.

7.மாடு, ஒட்டகத்தின் ஏழு பங்குகளில் நபி (ஸல்) அவர்கள்,மற்ற நபிமார்கள், ஸஹாபாக்கள், இறைநேசர்கள் ,தம் குடும்பத்திலுள்ள மரணித்தவர்களின் பெயர்களையும் சேர்க்கலாம். 8.ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்து ஒரு மாட்டை குா்பானி கொடுத்தால் அதன் இறைச்சியை பங்குகளாக பிாிக்க வேண்டியதில்லை. 9.ஏழு பேர் சேர்ந்த கொடுக்கும் கூட்டுக் குர்பானியில் ஒருவர் இறந்துவிட்டால் மற்றவர்கள் அவரது வாரிசுகளிடன் அனுமதி கேட்கவேண்டும். அவர்கள் அனுமதி கொடுத்தால் எல்லோரின் குா்பானி நிறைவேறும். இல்லாவிட்டால் நிறைவேறாது. 10.அறுக்குமிடத்தில் ஏழுபேரும் இருப்பதே, அவர்களின் பெயரை படிப்பது அவசியமல்ல.அறுப்பவர் அவர்களை நிய்யத் செய்து கொண்டால் போதும்.

குா்பானி கொடுக்கும்முறை

 1.குா்பானி கொடுப்பதற்கு முன் அதன் பாலை கற்பதோ ரோமங்களை பிடுங்குவதும் மக்ரூஹ் ஆகும் . 2.அதன் மீது சுமை ஏற்றுவது அதில் சவாரி செய்வது கூலிக்காக விடுவதும் கூடாது. 3.மேற்கண்ட காரியங்களில் ஏதேனும் செய்தி இருந்தால் அப்போது குறிப்பிட்ட தொகையினை சதகா செய்துவிடவேண்டும். 4.குா்பானி கொடுப்பவர் பிராணியை தானே அறுப்பது தான் சிறப்பு. அறுக்க தெரியவில்லை என்றால் பக்கத்தில் நிற்கலாம்.5.அறுப்பதற்கு முன் கிப்லாவை முன்னோக்கி வாறு அதனை படுக்க வைத்து நன்கு கூர்மையா கத்தீட்டிய கத்தியால் பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூறியவாறு அதன் உணவுக்குழாய், மூச்சுக்குழாய், இரு இரத்த நாளங்கள் ஆகிய நான்கையும் ஒரே சேர அறுக்க வேண்டும். 6.அவற்றில் ஏதேனும் மூன்று அறுபட்டு ஒன்று விடுபட்டு இருந்தாலும் கூடிவிடும். 7.பிஸ்மில்லாஹி சொல்வதை மறதியாக விட்டிருந்தாலும் குா்பானி நிறைவேறிவிடும.8.ஒரு பிராணிக்கும் முன்னால் வைத்து இன்னொரு பிராணியை அறுப்பது மக்ரூஹ் ஆகும .

9.அறுப்பதற்கு முன் அதற்குத் தீனி போட்டு தண்ணீர் புகட்ட வேண்டும், பசித்த,தாகித்த நிலையில் அறுப்பது மக்ரூஹ் ஆகும்.10.தலை துண்டாக்குமளவு அறுப்பதும் மக்ரூஹ், ஆனால் குா்பானி கூடிவிடும். 11.அறுத்தபின் உடலிலுள்ள இரத்தம் முழுவதும் வெளியேறி உடல் சூடு தணியுமளவு தாமதித்தபின் தலையை அறுத்து தோலை உாிக்க வேண்டும். 12.அறுக்கும் போது அதன் வயிற்றிலிருந்து உயிருடன் குட்டி வெளியே வந்தால் அதனையும் இறுக்க வேண்டும்.


அறுப்பதற்கு முன்னும், பின்னும் ஓத வேண்டிய துஆக்கள்.


பிஸ்மில்லாஹிா்ரஹ்மானிா்ரஹீம்


இன்னி வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவாத்தி வல்அா்ள ஹனீஃபவ் வமா அன மினல் முஷ்ரிகீன் இன்ன ஸலாத்தி லதுஸுகீ வமஹ்யாய வம்மாத்தி லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீக்க லஹு வபிதாலிக உமிர்து வ அன அவ்வலுல் முஸ்லிமீன் அல்லாஹும்ம மின்கவலக.என்று ஓதியபின் பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூறி அறுத்தபின் அல்லாஹும்ம தகப்பல்ஹு மின்னீ கமாதகப்பல்தமின் ஹபீபிக முஹம்மதிவ் வகலீலிக இப்ரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று ஓத வேண்டும்.

(குறிப்பு)அறுக்கும் போது ஓத வேண்டிய துஆவைத் தவிர அறுப்பதற்கு முன்னும் பின்னுன் ஓதவேண்டிய துஆக்கள் கட்டாயமல்ல. அவற்றை ஓதுவது சிறப்பு ஓதாவிட்டாலும் குா்பானி நிறைவேறிவிடும். அல்லாஹ்விற்காக குா்பானி கொடுக்கிறேன் என்று மனதில் நிய்யத் செய்து கொண்டாலே போதும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ