அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
தொழுகையின் நிபந்தனைகள்
1.உடல் சுத்தம் 2.உடை சுத்தம் 3.இடம் சுத்தம். 4.உடம்பில் மறைக்க வேண்டிய இடங்களை மறைத்து வைத்தல் 5.தொழுகை நேரம் அறிதல். 6.கிப்லாவை முன்னோக்குதல். 7.தொழுவதாக நியத்து செய்தல். 8.நிலை நிற்பது. 9.அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டுவது. 10.கிராஅத் ஒதுவது. 11.ருகூஉ செய்வது. 12.ஸஜ்தா செய்வது. 13.அத்தஹிய்யாத்துக்காக இருப்பது.
தொழுகையின் சுன்னத்துக்கள்
1.தக்பீர் தஹ்ரீமா கட்டுவதற்காக இரு கைகளையும், இரு காதுகள் வரை உயர்த்துதல். 2.இரு கைகளின் விரல்களையும் விரித்து வைத்து. 3.இரு கைகளையும் தொப்புளுக்குக் கீழ் கட்டிக் கொள்ளுதல்,4. ஸனா ஓதுவது. 5.ஆஊது, பிஸ்மி, ஆமீன்,ஆகியவற்றை மெதுவாகச் செல்வது. 6.ருகூஉ, ஸஜ்தா ஆகியவற்றில் 3 தடவை தஸ்பீஹ் சொல்வது. 7.ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு மாறும்போது தக்பீர் சொல்வது. 8.ருகூஉவில்ருந்து எழுந்திருக்கும் போது (ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்) என்று கூறுவது 9.ருகூஉவில் கைவிரலை விரித்து வைப்பது. 10. ருகூஉவில் இரு கைகளனாலும் இரு முழங்கால் முட்டிகளை பிடிப்பது. 11.சிறு நிலை சிறு இருப்பு ஆகியவற்றில் சிறிது நேரம் தாமதிப்பது. 12.அத்தஹிய்யாத்திற்குப் பின் ஸலவாத்து ஓதுவது 13.ஸலவாத்துக்குப்பின் துஆ ஓதுவது.
தொழுகையை முறிப்கவை
1.தெரிந்து அல்லது மறந்து பேசுதல் 2.ஸலாம் சொல்லுதல் 3.ஸலாமுக்குப்பதில் சொல்லுதல் 4.சந்தோச செய்திக்கு பதில் சொல்லுதல் 5.துக்கச் செய்திக்கு பதில் சொல்லுதல்.
6.உண்ணுதல். 7.புலம்பல். 8.இரண்டு கைகளையும் பூமியை விட்டு உயர்த்திக் கொள்ளுதல். 9.ஸஜ்தாவில் நெற்றியை பூமியை விட்டு தனியாக்கிக் கொள்ளுதல்.10.இமாமை விட முந்தி எழுதல். 11.தனக்கு கேட்கும்படி சிரித்தல் 12.பா்ளாமன செயல்களில் ஒன்றே விடுதல்.
0 Comments