بِسۡمِ اللّٰهِ الرَّ حۡمٰنِ الرَّ حِيۡمِ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ


சாப்பிடும் முன் ஓதும் துஆ


بِسۡمِ اللّٰهِ


அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கிறேன்.



சாப்பிடும் முன் துஆ ஓத மறந்து விட்டால்



بِسۡمِ اللّٰهِ أَوَّلَهُ وَاٰخِرَهُ


 இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கிறேன்.


சாப்பிட்ட பின் ஓதும் துஆ


اَلۡحَمۡدُ لِلّٰهِ الَّذِيۡ أَطۡعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسۡلِمِيۡنَ



 எங்களுக்கு உணவளித்து, நீர் பருகச் செய்து, எங்களை முஸ்லிம்களாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.


சாப்பிடுவதின் ஸுன்னத்துக்கள்



1.சாப்பிடும் முன் விரிப்பு விரிப்பது.


2.இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவது.


3.சாப்பிடுவதற்கு முன்பு துஆ ஓதுவது.


4.ஒரு காலை மடக்கி வைத்து மற்றொரு காலை குத்த வைத்து உட்காருவது. அத்தஹிய்யாத்து முறையிலும் உட்காரலாம்.


5.வலது கையால் சாப்பிடுவது.


6.தன் பக்கமிருந்து சாப்பிடுவது.


7.மூன்று விரல்களால் சாப்பிடுவது


8.உணவு கீழே விழுந்துவிட்டால் அதை எடுத்துச்சாப்பிடுவது.


9.  தட்டை வழித்தும், கைவிரல்களைச் சூப்பியும் சாப்பிடுவது.


10. சாய்ந்துகொண்டு சாப்பிடக்கூடாது.


11.உணவில் குறை கூறக்கூடாது.


12.  மிகவும் சூடாக சாப்பிடக்கூடாது.


13.சாப்பிட்ட பிறகு துஆ ஓதுவது


14.சாப்பிட்ட பிறகு கை கழுவி வாய் கொப்பளித்துக் கொள்வது.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ