muslim kalima tamil, 5 shahadath kalima,5 kalima,kalima in tamil. pdf download
PDF download👇👇👇
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
بِسۡمِ اللّٰهِ الرَّ حۡمٰنِ الرَّ حِيۡمِ
முதலாம் கலிமா தய்யிபா
அவ்வல் கலிமா
لَآ إِلٰهَ إِلاَّ اللّٰهُ مُحَمَّدٌ رَّسُوۡلُ اللّٰهِ
லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்
பொருள்:
வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபிﷺ அவா்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதராக இருக்கிறார்கள்.
இரண்டாம் கலிமா ஷஹாதத்
أَشۡهَدُ أَنۡ لَّآ إِلٰهَ إِلَّا اللّٰهُ وَأَشۡهَدُ
أَنَّ مُحَمَّدًا عَبۡدُهُ وَرَسُوۡلُهُ
அஷ்ஹது அ(ன்)ல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு
பொருள்:
நிச்சயமாக வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. மேலும் முஹம்மது நபிﷺ அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாராகவும் திருத் தூதராகவும் இருக்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன்.
மூன்றாம் கலிமா தம்ஜீத்
سُبۡحَانَ اللّهِ وَالۡحَمۡدُ لِلّٰهِ وَلَآ إِلٰهَ
إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكۡبَرُ وَلَا حَوۡلَ وَلَا
قُوَّةَ إِلَّا بِاللّٰهِ الۡعَلِّيِ الۡعَظِيۡمِ
சுபஹானல்லாஹு வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹில் அலிய்யில் அழீம்
பொருள்:
அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம். மேலும் வணங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ் மிகப்பெரியவன் உயர்வும், மகிமையும் வாய்ந்த அல்லாஹ்வின் உதவியின்றிபாவத்தைவிட்டுத் தப்பிக்கவும், நன்மை செய்யவும் யாருக்கும் சக்தியில்லை.
நான்காம் கலிமா தவ்ஹுத்
لَآ إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحۡدَهُ لَا شَرِيۡكَ لَهُ،
لَهُ الۡمُلۡكُ وَلَهُ الۡحَمۡدُ يُحۡيِيۡ وَيُمِيۡتُ
بِيَدِهِ الۡخَيۡرُ وَهُوَ عَلٰی كُلِّ شَيۡءٍ قَدِيۡرٌ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக் கலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து பியதிஹில் ஹாய்ர் வஹுவ அலா குல்லி ஷை இன் கதீர்
பொருள்:
வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை அவன் தனித்தவன், அவனுக்கு யாரும் இணை இல்லை. ஆட்சியும், புகழும் அவனுக்கே சொந்தம் அவனே உயிர் கொடுக்கிறான். அவனே மரணிக்கச் செய்கிறான்.எல்லா நன்மைகளும் அவன் கையிலேயே இருக்கின்றன அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் சக்தி உடையவனாக இருக்கின்றான்.
ஐந்தாம் ரத்துல் குப்ர்
اَللّٰهُمَّ اِنِّیۡ اَعُوۡذُ بِكَ مِنۡ اَنۡ اُشۡرِكَ بِكَ شَيۡأً وَّ اَنَا اَعۡلَمُ وَاَسۡتَغۡفِرُكَ لِمَا لَآ اَعۡلَمُ اِنَّكَ اَنۡتَ عَلَّامُ الۡغُيُوۡبِتُبۡتُ عَنۡهُ وَتَبَرَّأَتُ عَنۡ كُلِّ دِيۡنٍ سِوٰی دِيۡنِ الۡاِسۡلَامِ وَاَسۡلَمۡتُ وَاٰمَنۡتُ وَ اَقُوۡلُ لَآاِلٰهَ اِلَّااللّٰهُ مُحَمَّدُرَّسُوۡلُ اللّٰهُ
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மின் அன் உஷ்ரிக்க பிக்க ஷை அ(ன்)வ் வஅன அங்லமு வஅஸ்தங் F பிருக்க லிமாலா அங்லமு இன்னக்க அன்த்த ஙல்லாமுல் ஙீ யூப் துப்த்து ஙன்ஹு வதபர்ரஃத்து ஙன் குல்லிதீனின் சிவா தீனில் இஸ்லாமி வஅஸ்லம்த்து வஆமன்த்து வஅகூலு லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி
பொருள்:
அல்லாஹ்வே நான் அறிந்த வனாயிருக்கும் நிலையில் உன்னைத் தவிர வேறு எந்த வஸ்துக்களையும் இனை வைக்காமல் இருப்பதற்கு உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.நான் அறியாமல் செய்த குற்றத்திற்காக உன்னிடம் பிழை பொறுக்கத் தேடுகிறேன். அந்த இணை வைக்குதலை விட்டும் தௌபாச்செய்து மீண்டேன் இணை வைக்குதல் முதலிய பாவங்களை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக நான் வழிபட்டுவிட்டேன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முகமது நபி அல்லாஹ்வின் திருத்தூதராக இருக்கிறார்கள் என்று சொல்லி ஈமான் உறுதிகொண்டேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Kalima in tamil
Kalima 1
Kalima 2
Kalima 3
Kalima 4
Kalima 5
1 to 5 kalima in tamil
நான்காம் கலிமா
0 Comments